மாத அருளாசி

ஆடி மாத அருளாசி 2023

ஆனி மாத அருளாசி 2023
வைகாசி மாத அருளாசி 2023
ஆடி மாத அமாவாசை திதி (16.08.2023) சத்சங்க விவாத கிரந்த அருளாசி
தவலோகம் அதில் இருந்து இவ் புவியில் கிரந்த ஒளியால் செப்புகிறேன் கேளும் மக்கா மாந்தர்களே தொண்டாற்றான் இவ் குடில்தனில் வாசி திதி காலமதும் பெரும் நல் யோக பலன்கள் தந்திடுவோம் சத்சங்க மாந்தர்கள் ஒன்று கூடுவதும் இவ் லோகம் சுபிட்சம் பெறவும் தரும யோக பலன்கள் மேன்மை பெறவும் ஆலயம் மேன்மை ஓங்க வேண்டி யான் செப்புகிறேன்… அவையே மனதில் கொண்டு தரும, ஞான புண்ணியங்கள் ஆள மனமார சேவை செய்வீர்கள் ஆலயம் எமக்கேதப்பா? லோகம் சுபிட்சம் பெற்றால் யாவரும் நலம் பெறுவீர்கள் தன்னலம் இல்லாமல் ஞானத்தை கருத்தில் கொண்டு சேவைகள் யாவும் நீர் செய்தால் யோக மார்க்கமதில் அழைத்து தருமயோக கருமவிதி புண்ணிய பலன்கள் தந்திடுவோம் யான்… இந்நாள் ஜீவ மோட்சம் கண்ட என் பின் வந்த சித்தர்கள் யாவரும் குடிகொண்டு உள்ளார்கள் அவ் குடிகொண்டு உள்ளதின் பேரருள் அருள்தனை ஜீவனில் உணர ஆத்ம யோகநிலை காண செப்பதொரு அழைத்தோம் யாம் அருள்வாசம் செய்தவர்தனக்கு அழகாக பேரருள்தான்… தரும நிலை காக்க, யோகங்கள் ஆள வழி யாவும் தந்திடும் பாரு சத்சங்கங்கள் செப்புகிறோமடா பல்வாராய் இவ் புவியில்தனில் ஆனாலும் ஓர் சிறப்பு உண்டு காஞ்சிதடம் இவ் காஞ்சிதடம் அருள்ஞான தடமடா பேரருள் பெறுவீர்கள்… பெரும் புண்ணிய பலன் கையில் இருந்தும் மாற்று கோணம் மாற்று திக்கில் சென்று மதியிழந்து நிற்பது மகனிவன் தனக்கும் ஆகாது யாவருமே தன்னிடம் இருக்கும் ஆன்மா பலம்தன்னை அழகாக உணர்ந்து இவ் குடில் மூலம் ஞானம் தேடுவது உத்தம நிலை… முன்னே உரைத்துள்ளேன் இவ் சுருதி புண்ணியம் போன்று ஞான மார்க்கம் அழைத்துச் செல்ல எவ்வார்? சுருதியும் கோளும் உண்டென்று யான் செப்ப கேளு இவையே சிறந்ததடா கலியுகமடா திதி கோள்கள் நாள் நட்சத்திரங்கள் மாறச்செய்யும் புவியின் அமைப்பும் அசைபாடி நின்றது பாரு அவையால் மானிடர்களுக்கு பல துன்பங்கள் வந்திடும் காலமிப்போ… அவையே மறக்கவும் அபயம் காக்கவும் அழகாக இவ் குடில்தனக்கு அழைத்து ஞானத்தை தர செப்புகிறேன் யாவரும் தான, தரும புண்ணியபடி ஆலயங்கள் எழுப்ப உத்தமம் ஆலயம் எழுப்ப அவரவரும் பாடுபடுவதும் மா உத்தமம் அவையெண்ணி என்னிடமும் வினா கேட்பது ஏது? தமக்காக ஓர் ஆலங்கள் அமைக்க தன் இல்லம் அமைப்பது போன்று இவ் ஆலயங்கள் சேவை செய்தாலே கருமவினையிலிருந்து விடுபட்டு ஆலயங்கள் சிறந்தோங்கும் பாரு… புண்ணியங்கள் யாவும் ஆளதொரு புவியில் யான் வந்து நின்றேன் கையசைத்து நின்றாலும் ககன வித்தைகள் யாவும் புலன்மதில் செப்பினால்தான் யானருளை பெற இயலும் என்று மனமதில் தளர்ந்து குழம்பி கொள்ளாதீர்கள்… தனை உணரும் அமைப்பிற்கு தன்னடக்கமுடன் தருமத்தின் மூலம், சேவைகள் மூலம் பரிவர்த்தன யோக நிலைகளும் பக்குவ குன்ம யோக ஆன்ம நிலைகளும் யாவும் ஒன்று பெறுவது உத்தமம்… இவ் சுருதியை படிபடியாய் பட்டைதீட்டி இதன் காலம் வரை நல் மேன்மை கொண்டுதான் மெச்சதொரு வழி தந்துள்ளேன் அவையை பக்குவபடுத்தி வாழ்வில் முறையாக சென்றால் யாவும் எளிது கையில் அமிர்தம்தனை அன்பாக பிடித்துக்கொண்டு அலைவதுவும் வீண் இழப்பு தந்திடும் பாரு … புண்ணிய காலம் இவ் சுருதி பல்வார் பல் தேசங்கள் அகிலமெல்லாம் சுற்றி பேரருள் பிரபஞ்ச சக்தியை பெற்று இவ் சக்திகள் மூலம் மானிடர்தனக்கு இருக்கும் மா பஞ்சபூத சக்திகளை ஒன்று கூட்டி இவ் சுருதி மூலம் ஆளும் திருவாக்கின்படி யோகத்தை தரவே இவ் சுருதி மேன்மை பெற்றதடா… யுகமும் இல்லாமல் அகில தேசமெல்லாம் கடந்து தவலோகம் அதில் இருந்து உரைக்கும் ஓர் கான கதிர்வீச்சுகள் இவ் சுருதியில் பெற்று பேராற்றலாய் மாறுவதென்றால் மகா உத்தம நிலை அவையை புரிந்து பணிவுடன் வழிநடத்தி பக்குவமாய் ஓதுபவனும் மேன்மை காண யாவரும் ஒன்றுபட்டு உளமார பணிகள் ஆள செய்வதுவும் யான் மகிழ்வோம்… இவ் சுருதியே புண்ணியமடா ஞானமார்க்கமதில் இவ் சுருதி கொண்டு யாவும் யோக பலன்கள் தருவதுவும் எளிது பாரு கண நாழிகை கணபொழுதில் தந்தாலும் சோதனைகள் பல யாம் செய்தாலும் மனமதுவும் மனம் ஆடி மகனிவன்தான் இழிவு எண்ணங்கள் சிந்தனைகள் உள்ளாக்கினால் எவ்வாறு? யான் ஞான பாதைக்கும் யோக பலனும் தருவது? சோதனைகள் யாவும் வந்தாலும் நல் பக்குமாய் உண்மையுடன் உணர்ந்து யாவையும் தன்னகம் படுத்தி மனமதுவும் தளராமல் கண்டாலே இவ் லோகத்தில் அழைத்துச் செல்வேன் யான் ஐயமில்லாமல் இருப்பீர்கள் யாவருக்கும் துன்பம் ஏது… இந்நாளும் தீர்க்க ஆரோக்கியங்கள் மூதாதையர்கள் யாவரும் முன் காலமதும் விடுபட்டு மோட்சம் செய்தாலும் இதன் காலமும் மெய்மறந்து மெச்சி நிற்கிறார்கள் தரும புண்ணியங்கள் யாவருக்கும் உங்களுக்கு உண்டு பாரு ஞானத்தை பெறுவீர்கள் ஐயம் வேண்டாம்… பக்குவங்கள் அமைதி தேவையடா யோகத்தின்படி இவ் சுருதி கோல் அந்திபம் வரை யாவருக்கும் நல்மேன்மையும் தெளிவு தந்திடும் ஆனாலும் அவரவர் கர்ம விதியின்படியே அழைத்துச் செல்கின்றேன் யான் அவ் கர்மவிதி அவ்வாறிருந்தாலும் யாம் உரைக்கும் சொல்தனை அன்புடன் ஏற்று நல் பக்குவங்கள் பெறுவது உத்தமம் … அவையே ஆய்வு செய்தும் நல் வாழ்வு இல்லா நிலையென்றும் மனமதுவும் தடுமாறி ஆனாலும் இவ் கோல் பிரபஞ்சத்தில் அமர்ந்து யோகத்தை பெற வேண்டும் என்று நினைப்பது எவ்வாறு? மக்கா… அவையே உணர்ந்து புறம் தள்ளி யான் உள்ளேன் என்பதை ஆரோக்கியமுடன் ஆழ்நிலை யோக குண்டலினி சக்திதனில் அன்பாக அமரும் வரை ஆழ பதிவிடு அவ் பதிவிட்டாலே தெளிவு சிந்தை ஞானம் பிறக்கும் ஐயம் வேண்டாம்… ஆலயங்கள் யாவும் எழுந்தருளும் அன்புடனே உரைப்போம் ஆசானிடம் தரும, புண்ணியங்கள் யாவும் உரைக்கும் தரும, புண்ணியங்கள் எல்லாம் மெய்மறந்து செய்தாலும் உரைக்கும் காலமெல்லாம் பாடுபவனும் சோர்வு இல்லா ஆலயங்கள் நாடி தருமங்கள் செய்வதால் இவ் ஆலயம் எழுந்தோங்கும் லோகங்கள் சுபிட்சம் பெறும் இவ் கலியில் கோளால் ஏற்படும் விபரீத கண்டங்கள் யாவும் அகன்றோடும் பாரு… அன்புடனே இவ் கோள் நிலைகள் நடப்பு காலம் ஆகாதடா கலியில் யாம் பல்வார் பங்காய் பல் தேசமாய் மாந்தர்களை உருவாக்கி தரும புண்ணியங்கள் செய்தாலும் கலி பாவங்கள் யாவும் மிகுதி கொண்டே உள்ளதப்பா… இவ் மிகுதி கொண்டே உள்ளதனால் எதிர்மறை சக்திகள் ஆளச்செய்யும் எதிர்மறையாய் எண்ணமெல்லாம் சிந்தை கூடும், யாவரும் உறவுவிட்டு செல்வார்கள் மன நிறைவு இல்லா மாயையில் சிக்கி, கௌரவ நிலை கொண்டே லோகத்தில் சுபிட்சமான தோற்றம் இல்லா மாய தோற்ற உறவே கொண்டாடுவார்கள்… அவையே புறம் தள்ளி நல்லதோர் வாழ்வு பெறவும், தீர்க்க தருமநிலை பெறவும் யான் மாந்தர்கள் சுபிட்சம் பெறவே பாடுபடுகிறேன் … பாடுபடுகிறேன் என்றால் வினா கேட்பீர்கள்; என்னால் இயம்ப இயலாதா? யாவும் சுபிட்சம் தர இயலாதா? என்று இவ் லோகம் கலியுகமடா இவ் புவியில் ஆளும் சக்திகள் எல்லாம் மாய நிலையும் சம நிலையாய் கொண்டதடா ஓர் சக்தி நிலையை தந்து அவையே தேகத்தில் செலுத்தி மேல் நிலை கண்டு உங்களால் இயக்க நிலை காண்பதுவே இவ் புலியில் விதி அமைப்பு உண்டு; அவையால் உங்களாலே இயலும் … யான் தரும் சக்திதனை உணர்ந்து அவையை நீங்கள் ஆட்கொண்டால் உங்களால் இயலாதது ஏதென்று உரைக்க யோக நிலை பெறுவீர்கள் ஐயம் வேண்டாம் இவ் உரைக்கும் சத்சங்க வாக்கே பெரும் யோகம் மதியில் வைத்து புரிந்துகொண்டு வாழ்வை தெளிவாக நடந்தால் யாவும் சுபிட்சம் பெறுவீர்கள் ஐயம் வேண்டாம்… இனி காலம் முதல் மகர திங்கள் வரை நிசி வேளை பூரண திதி யாகங்கள் உத்தமம், உத்தமம் யாவும் பெரும் சித்தி தந்திடும் இவ் தொண்டாற்றான் குடியில் தவலோக மார்க்கம் தவம் செய்யும் புண்ணிய யோகமடா இவையில் வந்து நகைச்சுவையாடி மனம் தெளிவு பெறா குடும்ப இன்னலை போக்கி ஆளுவது எவ்வாற்? தவத்தை கொண்டு தவம் செய் மன அமைதி கொண்டு தவம் செய் மனம் குமுறலை கொண்டு தவம் செய்; தவமே உமது சொத்து அவ் தவநிலை கடந்தால் யான் வந்து நிற்பேன் யாவும் நலம் தர… அருள் தருவோமடா கண்ணும் விழித்தாலும், கண் விழியில் நில்லானாலும், மனம் சஞ்சலங்கள் யாவும் வந்தாலும் இலக்கு ஒன்றென்று நினைத்து அன்புடனே தவசு செய்தால்; யாவும் எளிமை அவையை புரிந்துகொண்டு ஞானம் பெற அன்போடு அழைத்துச் செல்வேன்… கோசாலை புண்ணிய யோகமடா பிரபஞ்ச சக்திகள் எல்லாம் இவ் துளசிதனில் ஐயமில்லாமல் பட்டு இவ் தேசமெல்லாம் சுபிட்சம் பெறும்… வரை கோட்டை எல்லைதனில் வட்டமிட்ட திசையெல்லாம் அன்புடனே சித்தர்கள் வாசம் செய்து இவ் மண் சுபிட்சம் பெற்றது… இவ் மண் சுபிட்சம் பெரும் உத்தமம் இவ் மண் சுபிட்சம் அள்ளி உண்டால் யாவும் பிணிகள் ஓடும் அமைப்பு காலம் உண்டு பாரு… சித்தர்கள் பிரபஞ்ச சக்திகள் யாவும் இவ் குடில்தனக்கு தந்திடுவார்கள் ஆலயங்கள் யாவும் ஆக்கம் பின்னே யாவும் சுபிட்சம் தரும் மாந்தர்கள் நோயில்லா நிலையும் கொண்டாடுவார்கள் ஐயம் வேண்டாம் புகழ் தரும் இவ் தேசங்கள், ஆலயங்கள் ஐயம் வேண்டாம்… நம்மால் இதன் காலம் வரை எவ்வாறு? உணர? என்று வினாவும் கேட்காதீர்கள் அன்புடனே சந்ததிகள் தழைத்து வர இவ் தேசங்கள் பெரும் சித்தி தருமடா… உண்மைகள் யாவும் பக்குவமாய் படிபடியாய் மேன்மை ஓங்கி நல்லதோர் உங்களுக்கு மன சிந்தனைகள் யாவும் தெளிவு பெற்றால்தான் அதன் பின் ஐயமில்லா இவ் சக்திகள் யாவும் பிறருக்கு வெளிச்சத்திற்கு ஆளாகும் அவையை உணர்ந்து மேன்மை பெறுவீர்கள் யாவும் சுபிட்சம் பெறும்… கோசாலை பராமரிப்பு கோகன்று ஆள்வதும் பெரும் உத்தமம் அவையை ஆள்வது உத்தம நிலை வினாதனை கேட்பீர்கள் அன்பு மக்கா… ஆத்ம நிலை உணரும் பக்குவத்தை தன் நிலை உணரும் அமைப்பே முன்னே உனக்கு உரைத்துள்ளேன் மழலை போன்றும் இது போல் வினா கேட்கிறாய்… யாவும் உன்னிடம் செப்புகிறேன் ஐயம் வேண்டாம் ஞானம் பெறும் வினாதனை அன்புடன் நலமாய் கேட்க உத்தமம் பெருநிறை அருள் தருவோம் ஐயம் வேண்டாம்… தவசை மேன்மை கொண்டு யோகநிலை பெறுவீர்கள் ஆலயங்கள் யாவும் சிறந்தெழும் ஆலயங்கள் ஓங்க மனமதில் ஓர்மை பெறுவீர்கள்… தன்னிலை பெற பஞ்சமுக தீபங்கள் உதய காலம் யாவும் ஆழ்நிலை குண்டலினி யாவும் மேன்மை பெற மூலாதாரத்தை மேன்மை பெற சுத்தம் செய்வீர்கள் யாவரும் அவ் மூலாதாரத்தை மேன்மை பெற்றாலே… தன்னடக்கம் தன் நிலை உணர இயலுமடா நல் பக்தியாய் உணர வைப்போம் ஐயம் வேண்டாம் மகர திங்கள் இவ் தொடரும் சத்சங்க வாக்கில் யாவரும் சுபிட்ச நிலையாய் தேகத்தை சமநிலைபடுத்தி, தேகத்தை புனிதபடுத்தி அமர்ந்து யாவரும் கேட்க யாவருக்கும் நல்வழி தந்திடுவோம் பாடிய திருவாக்கு முற்றும். சுபம்