ஜீவ நாடி
ஜீவ நாடியிடம் இருந்து ஆன்மீக ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.
அகத்தியர் ஜீவநாடி என்பது அகத்திய மகரிஷி தமது அருள் வாக்கினை, இவ் பிரபஞ்சத்தில் இருக்கும் ஜீவகாந்த கதிரின் துனை கொண்டு ஒளி வடிவில் வட்ட எழுத்துக்கள் கொண்ட பாடல்களாக, ஓலைச்சுவடியில் தோன்றி மறையச் செய்யும் முறையாகும்.
பிறப்பும், இறப்பும் இல்லாமல் ஒளி உலகத்தில் என்றென்றும் நிலைபெற்று இருக்கும் சித்தர்கள், ரிஷிகள், ஜீவநாடி வாசிப்பவரின் ஆன்மா மூலம் ஊடுருவி, அவர் வழியே அருளாசிகளை உரைக்கிறார்கள்.
ஜீவ நாடி ஆசான்
திரு குமரவேல் அய்யா அவர்கள் நாடி ஜோதிட பரம்பரையை சேர்ந்தவர். காலம் காலமாக ஜோதிட கலையினை குலத்தொழிலாக முன்னோர் வழியினை பின்பற்றி பலன் உரைப்பவர்.
இத்தகையவர்க்கு, இறையின் மாபெரும் கருனையினால், “அகத்தியர் ஜீவநாடி” பொக்கிஷமாக அமையப் பெற்றது. இவ் ஜீவநாடியின் மூலம், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சித்தரின் வாக்குப்படி, உலோகம் கபிட்சம் பெறவும், பலரது வாழ்க்கை மேன்மையடையவும், மாற்றம் பெறவும், தன் நலன் பாராது அயராது பாடுபடுபவர்.