கோவில் வரலாறு
ஓம் ஸ்ரீ அகத்தியர் ஜீவ நாடி அருட்குடில்
சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு, ஸ்ரீ குருநாதர் அகத்திய மகரிஷிக்கும், லோபமுத்ரா தேவிக்கும் கற்குடில் இருந்ததாகவும், அது காலதேச மாற்றங்களினால் முழுவதும் சிதலமடைந்து, உருமாறி, இருந்த இடம் தெரியாமல் மறைந்ததாகவும் அகத்திய மகரிஷி தமது ஜீவநாடி கிரந்தத்தில் உறைத்துள்ளார்கள். மேலும், இன்றும் சித்தர்களும், ரிஷிகளும் அரூபமாக, அந்த இடத்தில் தவசுகள் செய்வதாகவும் ஸ்ரீ குரு உரைத்துள்ளார்கள்.
இவ் ஊரின் பண்டைய பெயர் “தொண்டாற்றான்குடி”. இவ் கவியுகத்தில் அமைந்த பெயர் “விஷார்”. இங்கிருந்து சிறந்த சைவ நெறியாளர்கள், பல ஊர்களுக்கு சென்று சைவ சமயம் பரவ தொண்டு சேவை செய்தார்கள்.
இத்தகைய சிறப்புகள் பல வாய்ந்த இவ்கற்குடில், முன்பு அமையப்பெற்ற அதே இடத்தில் மீண்டும் கற்கூடில் அமைக்குமாறு தமது ஜீவநாடியில் ஸ்ரீ குரு உரைத்துள்ளார்கள்.
இவ் கட்டளைக்கு ஏற்ப, குருவருளால் கற்கோவில் முன்பு அமைந்த அதே இடத்தில் மீண்டும் கற்கோவில் அமையப்பெற்று வருகிறது